ஆபாச உடையில் ராஷ்மிகா மந்தனா: வைரலாகும் வீடியோ - கடும் நடவடிக்கை எடுக்க கூறிய அமிதாப் பச்சன்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.;

Update:2023-11-06 15:37 IST

கோப்புக்காட்சி

மும்பை,

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு நல்ல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறதோ, அதேவேளையில் அதில் அதிகமான ஆபத்துக்களும் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. சமீப காலமாக டிரெண்டிங்கில் உள்ளது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி. இதைப் பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை சுலபமாக மற்றொருவரின் முகத்தை வைத்து மார்பிங் செய்துவிட முடியும்.

அண்மையில் கூட தமன்னாவின் காவாலா டான்ஸ் வீடியோவை, நடிகை சிம்ரன் ஆடியது போல் அப்படியே தத்ரூபமாக மாற்றி காட்டி இருந்தது இந்த டெக்னாலஜி. அப்போது அந்த வீடியோவுக்கு பலரும் தத்ரூபமாக இருப்பதாக கமெண்ட் செய்து வந்தனர். நடிகை சிம்ரன் கூட அந்த வீடியோவை பார்த்து தான் நடனமாடியது போல் இருப்பதாக கூறி ஆச்சரியத்தில் மூழ்கி போனார்.

அந்த டெக்னாலஜியின் ஆபத்தை உணர்த்தும் ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி உள்ளது. அதன்படி நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது உண்மை என நினைத்து பலரும் வைரலாக்கினர். ஆனால் உண்மையில் இது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவாகும்.

இந்த வீடியோ வைரலான நிலையில், இதனை பார்த்து ஷாக் ஆன பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், இதனை மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகை ராஷ்மிகாவும், அமிதாப் பச்சனும் குட் பாய் என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்