ஆபாச படம் கசிய விட்ட வழக்கு: ராக்கி சாவந்த் கைதாவாரா?

ராக்கி சாவந்த் துபாயில் தலைமறைவாகி விட்டதாக அவரது முன்னாள் கணவர் ஆதில் கூறியுள்ளார்.;

Update:2024-04-25 08:57 IST
ஆபாச படம் கசிய விட்ட வழக்கு:  ராக்கி சாவந்த் கைதாவாரா?

மும்பை,

இந்தி திரையுலகில் கவர்ச்சி நடிகையாக கலக்கி வரும் ராக்கி சாவந்த் தமிழில் மும்பை எக்ஸ்பிரஸ், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும், ஆதில் என்பவருக்கும் கடந்த வருடம் ஜனவரியில் திருமணம் நடந்த நிலையில் ஒரு மாதத்திலேயே கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக ராக்கி சாவந்த் போலீசில் புகார் அளித்தார். இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் நடிகையும், மாடல் அழகியுமான ஷெர்லின் சோப்ரா தனது ஆபாச படங்களை ராக்கி சாவந்த் வலைத்தளங்களில் பரப்பியதாக மும்பை அம்பேலி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு ராக்கி சாவந்த் தாக்கல் செய்த மனுக்கள் இரண்டு முறை தள்ளுபடியான நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடியாகி உள்ளது.

இதுகுறித்து ராக்கி சாவந்த் முன்னாள் கணவர் ஆதில் கூறும்போது, 'ராக்கி சாவந்த் நான்கு வாரங்களில் போலீசில் சரணடைய கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ராக்கி சாவந்த் துபாயில் தலைமறைவாகி விட்டார். அவர் இந்தியா திரும்பியதும் கைது செய்யப்படுவார்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்