மாரிசெல்வராஜுடன் இணையும் ரஜினி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

'வேட்டையன்' திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.;

Update:2024-01-08 22:12 IST

'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை லோகேஷ் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஜினியின் 172-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் 172-வது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது படங்களில் சமூகம் சார்ந்த கருத்துகளை வைத்து படம் இயக்கும் மாரி செல்வராஜ், ரஜினியின் படத்தை எப்படி இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்