விராட் கோலியுடன் செல்பி எடுத்துக்கொண்ட நடிகை ராதிகா

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியுடன் நடிகை ராதிகா எடுத்த செல்பி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2024-09-13 15:39 GMT

சென்னை,

நடிகை ராதிகா பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில்தான் முதல்முறையாக அறிமுகமானார். வெள்ளந்தியான அந்த கேரக்டருக்கு மிகப்பெரிய அளவில் பொருந்தினார் ராதிகா. இந்தப் படத்தின் வெற்றி, இவரை தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக்கியது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து மாஸ் காட்டிய ராதிகா, போல்டான மற்றும் ஸ்டைலிஷ்ஷான கேரக்டர்களிலும் மிகச்சிறப்பாக தன்னால் பொருந்த முடியும் என்பதை வெளிப்படுத்தினார். ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்

நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ராதிகாவிற்கு முன்னதாக நடந்த திருமணத்தில் ரேயான் என்ற பெண் உள்ளார். ராதிகா தற்போது நடிகை, சின்னத்திரை நடிகை, சீரியல் தயாரிப்பாளர் என பன்முகம் காட்டிவருகிறார். இவரது சித்தி உள்ளிட்ட சீரியல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவை. தொடர்ந்து ஒரு கட்டத்தில் சீரியல்களில் மிகப்பெரிய கவனம் செலுத்தி தானே லீட் கேரக்டர்களில் நடித்தார் ராதிகா. தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ராதிகா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு தனியாகவோ தன்னுடைய குடும்பத்தினருடனோ பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லண்டன் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் இடையில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்தித்துள்ளார். அவருடன் இணைந்து செல்பியும் எடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் இருப்பவர் விராட் கோலி. அவரது விளையாட்டு திறமையினால் நம்மைப் பெருமைப்பட வைத்தவர். லண்டனில் இருந்து சென்னை திரும்பும்போது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவருடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி. செல்பிக்கு நன்றி" என தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்