'தி குட் ஹாப்' பட டிரெய்லரை பகிர்ந்து கணவரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா
'தி குட் ஹாப்' படத்தில் நிக் ஜோனஸ் நடித்துள்ளார்;
சிட்னி,
கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் 2018-ம் ஆண்டு பாடகரும் நடிகருமான நிக் ஜோனாசை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் நிக் ஜோனஸ் நடிப்பில் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ள 'தி குட் ஹாப்' படத்தின் டிரெய்லரை பகிர்ந்துள்ளார். மேலும், அதனுடன் நிக் ஜோனசின் நடிப்பை மிகவும் பாராட்டியுள்ளார்.
அதில், "இந்த அழகான, அழுத்தமான, மனதைத் தொடும் திரைப்படத்தை காண என்னால் காத்திருக்க முடியவில்லை" என்றும், "நான் சற்று பாரபட்சமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிக் ஜோனஸ் தனித்துவமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் நடிகை பிரியங்கா சோப்ரா, ஆஸ்திரேலியாவில் 'தி பிளப்' படப்பிடிப்பில் இருக்கிறார். மேலும், அவர் ஜான் சீனா நடிக்கும் 'ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.