ராம் சரண், அல்லு அர்ஜுனுடனான போட்டி பற்றி பேசிய பிரபாஸ்
தென்னிந்திய சினிமா, நடிகர்களிடையே உள்ள ஒற்றுமைக்காக பாராட்டப்படுகிறது
சென்னை,
தென்னிந்திய சினிமா, நடிகர்களிடையே உள்ள ஒற்றுமைக்காக பாராட்டப்படுகிறது. இருந்த போதிலும், சில நடிகர்களுக்கிடையே வசூல் ரீதியாக போட்டி இருந்துகொடுதான் இருக்கிறது.
அவ்வாறு, பிரபல நடிகர் பிரபாஸ் தனக்கும் சக நடிகர்களுக்கும் இடையே போட்டி இருப்பதை ஒருமுறை ஒப்புக்கொண்டார். மேலும், அதை எவ்வாறு கையாண்டார் என்பதைவும் விளக்கினார்.
முன்னதாக நடந்த நேர்காணல் ஒன்றில், ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுனுடனான போட்டி பற்றி பிரபாஷிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில்,
'எல்லா துறைகளிலும் உள்ளதுபோலவே சினிமாவிலும் போட்டி இருக்கிறது. இருப்பினும், இப்போது இதுபோன்ற ஒரு விஷயத்தின் வெளிப்பாடு முன்பை விட அதிகமாக உள்ளது. எனினும், எந்த போட்டியுமின்றி திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறேன், என்றார்.