வீட்டின் வாசலில் கிடந்த செருப்பை திருடிச் சென்ற நபர்கள்... வீடியோ வெளியிட்ட பிரபல சின்னத்திரை நடிகை
2 நபர்கள் உயர்ரக பைக்கில் வந்து காலணிகளை திருடிச் சென்றதாகவும் நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதா வசித்து வருகிறார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிட்டுள்ள வீடியோ ஒன்றில், தங்கள் வீட்டின் வாசலில் இருந்த சில பொருட்கள் தொடர்ந்து காணாமல் போனதாகவும், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் 2 நபர்கள் உயர்ரக பைக்கில் வந்து காலணிகளை திருடிச் சென்றது பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வேறு ஏதோ பொருட்களை திருட வந்து, எதுவும் கிடைக்காமல் செருப்பை திருடிவிட்டுச் சென்றார்களா என்பது தனக்கு தெரியவில்லை என்றும், விடுமுறை நாட்களில் வீடுகளில் ஆட்கள் இருப்பார்கள் என்பது தெரிந்தும் இவ்வளவு தைரியமாக திருட வருகிறார்கள் என்பதை தெரியபடுத்துவதற்காகவும் இந்த வீடியோவை வெளிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பானதாக இருக்கும் என்று நினைத்ததாகவும், இனிமேல் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் நடிகை சங்கீத கேட்டுக் கொண்டுள்ளார்.