'அவர்தான் என்னை விட்டு...' - ரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நடிகை ரேணு தேசாய்

பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர் நடிகை ரேணு தேசாயை கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

Update: 2024-06-18 13:03 GMT

சென்னை,

தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ரேணு தேசாய் தமிழில் பார்த்திபன், பிரபுதேவாவுடன் 'ஜேம்ஸ் பாண்டு' படத்தில் நடித்துள்ளார். பின்னர் நடிகர் பவன் கல்யாணை திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தார். அதனைதொடர்ந்து, நடிகர் பவன் கல்யாண் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார்.

சில வருடங்களுக்கு முன்பு ரேணு தேசாய்க்கு இரண்டாவது திருமணத்துக்கான நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திடீரென்று குழந்தைகளின் எதிர்காலத்துக்காக திருமணத்தை ரத்து செய்து விட்டார். தற்போது குழந்தைகள் வளர்ந்துள்ள நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில், பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர் நடிகை ரேணு தேசாயை கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதில், "இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் அண்ணி(ரேணு தேசாய்). நீங்கள் கடவுளை தவறாக புரிந்து கொண்டீர்கள். ஒருவேளை இப்போது நீங்கள் அவருடைய மதிப்பை உணர்ந்திருக்கலாம். ஆனால் குழந்தைகள் பவன் கல்யாணுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது . இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை ரேணு தேசாய் ரசிகரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர்,

"உங்களுக்கு கொஞ்சமாவது புத்திசாலித்தனம் இருந்தால், இதுபோன்ற முட்டாள்தனமான கருத்தை பதிவிட மாட்டீர்கள். அவர்தான் என்னை விட்டு பிரிந்து மறுமணம் செய்து கொண்டார். தயவு செய்து இது போன்ற கருத்துகளை தவிர்க்கவும். இனிமேலும் என்னை வேதனைப்படுத்தாதீர்கள்," இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்