ஆஸ்கர் 2025: இந்திய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் குழு!

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது குழுவில் சேர பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், இந்த வருடம் இயக்குநர் ராஜமவுலி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-26 16:25 GMT

தொழில்ரீதியாக அர்ப்பணிப்பு, தகுதி உடைய பிரபலங்கள் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினர்களாக சேர அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், இந்த வருடம் 57 நாடுகளில் உள்ள 487 பிரபலங்களுக்கு புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதில் இயக்குநர் ராஜமவுலி, அவரது மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான ரமா ராஜமெளலி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், நடிகை ஷபானா ஆஸ்மி, இயக்குநர் ரீமா தாஸ் மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் உள்ளிட்டோருக்கு உறுப்பினராக இணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைக்கலைஞர்களான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இயக்குநர் மணி ரத்னம், நடிகர் சூர்யா ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்