மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: மனம் திறந்த நடிகை நிவேதா தாமஸ்

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக நடிகை நிவேதா தாமஸ் பேசியுள்ளார்.

Update: 2024-09-03 06:31 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபின், மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்தநிலையில், மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக நடிகை நிவேதா தாமஸ் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலம் வெளிவந்த தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு அவசியம். வீட்டில் இருப்பதை விட பணியிடத்தில்தான் பெண்கள் அதிக நேரம் இருக்கிறார்கள். ஹேமா கமிட்டியைபோல மற்ற திரைத்துறைகளிலும் கமிட்டிகள் வந்தால் நல்லது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்