நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம்...!

நித்யாமேனன் திருமணம் குறித்த கிசுகிசுக்கள் வலைத்தளத்தில் பரவி வருகிறது;

Update:2023-08-24 12:39 IST

பிரபல மலையாள நடிகையான நித்யாமேனன் தமிழில் 'வெப்பம்', 'ஓகே கண்மணி', 'மெர்சல்', 'காஞ்சனா 2', 'இருமுகன்', '24', 'திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

நித்யாமேனனுக்கு 35 வயது ஆகிறது. எனவே திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் அவரை வற்புறுத்தி வருகிறார்கள். பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபருடன் நித்யாமேனனுக்கு திருமணம் நடக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் பரவியது. அதனை நித்யாமேனன் மறுத்து இருந்தார்.

தற்போது மீண்டும் நித்யாமேனன் திருமணம் குறித்த கிசுகிசுக்கள் வலைத்தளத்தில் பரவி வருகிறது. தனது சிறுவயது நண்பரை நித்யாமேனன் காதலித்து வருவதாகவும் அந்த நண்பர் மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்றும், விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உண்மையாக இருந்தால் நித்யாமேனனே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்