'படத்தில் தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை வைத்தால்...' - நிகிலா விமலின் பேச்சு வைரல்

பெண் கதாபாத்திரங்கள் குறித்த நடிகை நிகிலா விமலின் பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.

Update: 2024-05-17 05:01 GMT

image courtecy:instagram@nikhilavimalofficial

சென்னை,

பிரபல நடிகை நிகிலா விமல். இவர் தமிழில் தம்பி, வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் போர் தொழில். இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப் பெரிய வெற்றி பெற்றது

தற்போது இவர் இரண்டு மலையாளப் படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை நிகிலா விமல் நேர்காணல் ஒன்றில் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அவர் பேசியதாவது,

'கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற வேண்டும். எல்லா படத்திற்கும் பெண் கதாபாத்திரங்கள் தேவையில்லை. ஆவேஷம், மஞ்சுமெல் பாய்ஸ் படங்களைப்போல. தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை படத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

அப்படி வைத்தால் கதையின் போக்கு கெட்டுவிடும். தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை வைப்பதற்கு பதிலாக வைக்காமல் இருப்பதே நல்லது. இவ்வாறு கூறினார். நடிகை நிகிலா விமலின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்