'விடுதலை' படத்தின் புதிய அப்டேட்
இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளது.
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு.. என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், 'விடுதலை' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Here's a glimpse into #Viduthalai Part-1 dubbing work. #Vetrimaaran @ilaiyaraaja @rsinfotainment @elredkumar@sooriofficial @VijaySethuOffl @MShenbagamoort3 @BhavaniSre @GrassRootFilmCo @PeterHeinOffl @mani_rsinfo @VelrajR @DoneChannel1 pic.twitter.com/DImLYRGxaY
— Red Giant Movies (@RedGiantMovies_) January 27, 2023