ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் புதிய அப்டேட்..!

இந்த படத்தில் ரஜினி தோன்றும் காட்சிகளில் வெவ்வேறு தீம் பாடல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2022-09-08 22:46 IST

சென்னை,

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினி தோன்றும் காட்சிகளில் வெவ்வேறு தீம் பாடல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்