மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.;

Update: 2024-05-04 17:16 GMT

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.

இதைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 6-ந்தேதி இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்