ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் போஸ்டர் வெளியீடு
ரஜினியின் 171-வது படத்தின் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த், ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் .லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா ரகுபதி, பஹத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர் . இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இதனிடையே ரஜினியின் 171-வது திரைப்படத்தை கைதி, மாஸ்டர்,விக்ரம்,லியோ உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். 'தலைவர் 171' என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஜினியின் 171-வது படத்தின் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் அடுத்த மாதம் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Thalaivar171TitleReveal on April 22 pic.twitter.com/ekXFdnjNhD
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 28, 2024