ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த நடிகர் நாகார்ஜுனா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.;

Update: 2024-08-29 13:12 GMT

சென்னை,

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக 'கூலி' உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதற்கிடையே, படத்தின் வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் நாளை மாலை 6 மணியிலிருந்து துவங்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று முதல் கதாபாத்திரத்தை கூலி படக்குழு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கூலி படத்தில் இணைந்திருக்கிறார்.

இப்படத்தில் சிமோன் என்கிற கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கில் உருவாகும் குபேரா படத்திலும் தனுஷுடனும் நாகார்ஜுனா நடிக்கிறார். இன்று அந்தப் படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்