என் கணவர் இவரை போல் இருக்க வேண்டும்...!! நடிகை ராஷ்மிகா மந்தனா குறிப்பிட்டது அவரா?
நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலில், அது நிச்சயம் உண்மையானது என்றும், அதனருகே புன்னகைக்கும் எமோஜி மற்றும் காதலை வெளிப்படுத்தும் எமோஜி ஆகியவை இடம் பெற்றிருந்தன.;
சென்னை,
இந்திய அளவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்ற பட்டியலில் முதல் இடம் பிடித்து இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடக்க காலத்தில் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் அதிக வரவேற்பை பெற்றன. திரைப்படத்தில் ஜோடியாக தோன்றிய அவர்கள், நிஜத்திலும் ஒன்றிணைவார்கள் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.
இதன்பின் இருவரும் வேறு வேறு வழிகளில் பயணித்தனர். நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த புஷ்பா படம் அவருக்கு பெயரை பெற்று தந்தது. தமிழில், நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருக்கிறார். இந்தியிலும் நடிகர் அமிதாப் பச்சனுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர் பக்கம் என்ற பெயரில் எக்ஸ் வலைதளத்தில் பதிவொன்று வெளியானது. அதில், உங்களுடைய கணவராக வருவதற்கு ஒருவருக்கு என்னென்ன தகுதிகளெல்லாம் இருக்க வேண்டும்? என கேட்கப்பட்டு உள்ளது.
அந்த பக்கத்திலேயே அதற்கு பதிலாக, அவள் இந்தியாவில் தேசிய அளவில் அனைவரையும் கவர கூடியவள். அவளுடைய கணவர் நிச்சயம் சிறப்பானவராக இருக்க வேண்டும். அவளுடைய கணவர் வி.டி.யை போன்று இருக்க வேண்டும். நான் அதிக தைரியத்துடனேயே இதனை தெரிவிக்கிறேன்.
அவளை யார் பாதுகாக்க முடியும்? நாம் அவளை ராணி என அழைக்கிறோம். அவளுடைய கணவரும் ஒரு ராஜாவை போன்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில், வி.டி. என்றால் விஜய் தேவரகொண்டாவின் தொடக்க எழுத்துகள் என்றும், அவரையே ராஷ்மிகா கூறுகிறார் என்றும் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். அவர்கள் இருவரும் லிவ்-இன் உறவில் இருக்கின்றனர் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இந்நிலையில், ரசிகரின் பக்கம் பகுதியில் வெளியான இந்த செய்திக்கு, நடிகை ராஷ்மிகா மந்தனா பெயரில் வெளியான பதிலில், அது நிச்சயம் உண்மையானது என பதிவிட்டதுடன், அதனருகே புன்னகைக்கும் எமோஜியும், காதலை வெளிப்படுத்தும் எமோஜியும் இடம் பெற்றிருந்தன.
இதனால், தேவரகொண்டாவுடனான தன்னுடைய காதலை ராஷ்மிகா உறுதிப்படுத்தி உள்ளார் என தெரிகிறது. ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் இது உண்மையா? உறுதிப்படுத்தி விட்டாரா? என அடுக்கடுக்காக விமர்சன பகுதியில் கேள்விகளை முன்வைத்தனர்.
இதில் பயனாளர் ஒருவர், எவ்வளவு காலம், அவர் ரசிகர்களை காக்க வைக்க முடியும்? என கேள்வி எழுப்பியதுடன், அவர்களுடைய உறவை வெளிப்படையாக அறிவிக்க கூடும் என தெரிவித்திருக்கிறார். இது எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது லட்சக்கணக்கான ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய் தேவரகொண்டா பற்றி ராஷ்மிகா மந்தனா பேசும்போது, நாங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். அதனால், என்னுடைய வாழ்வில் நான் மேற்கொள்ளும் அனைத்து விசயங்களிலும் அவரின் பங்கு இருக்கும்.
அவருடைய அறிவுரையை நான் கேட்பேன். ஆனால், எல்லாவற்றிற்கும் சரி என கூறுபவர் அல்ல அவர். எது சரி, எது சரியல்ல என கூறுவார். தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்க்கையில் மற்ற எல்லோரையும் விட அதிக உறுதுணையாக இருந்தவர். நான் உண்மையில் மதிக்க கூடிய நபர் அவர் என்றே நான் உணர்கிறேன் என கூறினார். கடைசியாக அனிமல் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா அடுத்து, புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.