திருமண நாளில் மீனா உருக்கம்

மீனா தனக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைந்த கணவர் புகைப்படத்துடன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.;

Update: 2022-07-15 12:37 GMT

தென்னிந்திய திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா 2009-ல் வித்யாசாகரை மணந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் துக்கத்தில் இருந்த மீனாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மீனா தனக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைந்த கணவர் புகைப்படத்துடன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ''நீங்கள் எங்களுக்கு கிடைத்த அழகான வரமாக இருந்தீர்கள். ஆனால், விரைவிலேயே எங்களிடம் இருந்து கடவுள் பறித்து சென்றுவிட்டார். ஆனால், எப்போதுமே எங்களுடைய இதயத்தில் இருப்பீர்கள். இந்த கடினமான நேரத்தில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தந்து அன்பை தெரிவித்து பிரார்த்தித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு நீங்கள் கண்டிப்பாக தேவை. உங்கள் அன்பை நாங்கள் உணர்கிறோம்" என்று தெரிவித்து உள்ளார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்