உயிருக்கே ஆபத்து... சொந்த வீட்டை விட்டு வெளியேறிய நடிகை பிரியங்கா சோப்ரா

கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரூ.160 கோடி மதிப்பில் சொந்த வீடு ஒன்றை பிரியங்கா வாங்கினார்.;

Update:2024-02-02 17:56 IST

சென்னை,

2000ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 9 படுக்கையறைகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா செண்டர், நீச்சல் குளம், தியேட்டர், விளையாட்டுக்கூடம் என சகல வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக ரூ.160 கோடி மதிப்பில் சொந்த வீடு ஒன்றை வாங்கினார். கடந்த நான்கு வருடங்களாக அந்த வீட்டில் தங்கள் குழந்தையுடன் வசித்து வந்த பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ் தம்பதி இப்போது அங்கிருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரூ.160 கோடி மதிப்பில் வாங்கிய அந்த வீட்டில் கட்டுமான பணிகள் முறையாக செய்யப்படாததால் ஆங்காங்கே நீர்கசிவு ஏற்பட்டு வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் பூஞ்சைகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டை விற்ற கட்டுமான நிறுவனம் மீது பிரியங்கா வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் உரிய இழப்பீட்டை அந்த நிறுவனம் வழங்கவேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்