'கில்லர்.. கில்லர்..' பிரியங்கா மோகன் வெளியிட்ட கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்..!

கேப்டன் மில்லர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.;

Update:2023-11-02 17:38 IST

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். அதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'கில்லர்.. கில்லர்..' என்று பதிவிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்துள்ள புகைப்படம்

 

Tags:    

மேலும் செய்திகள்