கார்த்தி 26 - படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு
படத்தின் தயாரிப்பு நிறுவனம் டுவிட்டரில் இந்த படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.;
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'கார்த்தி 26' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடிக்கிறார்.
முதல் கட்டமாக இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த படத்திற்கு 'வா வாத்தியாரே' என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பூஜை வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.