பிரபாஸ் நடிக்கும் `கல்கி 2898 ஏ.டி' படத்தில் துல்கர் சல்மான்...?

`கல்கி 2898 ஏ.டி' படத்தில் துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-05-04 12:59 GMT

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பெரிய நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன.

இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

சமீபத்தில் தான் படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்திற்காக புதிய வகை துப்பாக்கியின் புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படமும் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்