குஷி ஜோதிகாபோல் மாறிய ஜோவிகா - கவர்ச்சியில் இறங்கிய வனிதா மகள்

சேலையை முறுக்கி கட்டி, இடுப்பழகு தெரிய நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா நடத்திய கிளாமர் போட்டோஷூட் வைரல் ஆகி வருகிறது.;

Update:2024-02-25 10:50 IST

சென்னை,

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குடும்பத்தினரை பிரிந்து தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். வனிதாவுக்கு ஜோவிகா, ஜெயனிகா என இரு மகள்கள் உள்ளனர்.

வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா, படிப்பில் ஆர்வம் இல்லாததால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதையடுத்து சினிமாவில் ஹீரோயின் ஆவதற்காக மும்பையில் உள்ள ஆக்டிங் ஸ்கூலில் சேர்ந்து படித்துள்ளார். ஆக்டிங் ஸ்கூலில் படித்து முடித்ததும் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றி வருகிறார் ஜோவிகா. அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சிதான் ஜோவிகாவுக்கு புகழ் வெளிச்சத்தை கொடுத்தது. இந்நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களில் ஜோவிகாவும் ஒருவர்.

இருப்பினும் அவரால் இறுதிவரை செல்ல முடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜோவிகாவுக்கு ஹீரோயினாக நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜோவிகாவை வைத்து முதற்கட்டமாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி உள்ளார் வனிதா விஜயகுமார். அதில் சேலையில் இடையழகு தெரிய செம்ம கிளாமராக போஸ் கொடுத்தபடி ஜோவிகா நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

சேலையில் கிளாமராக போஸ் கொடுத்துள்ளதை பார்க்கும்போது குஷி ஜோதிகாபோல் ஜோவிகா இருப்பதாக இணையதள வாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்