'ஜெர்சி' முதல் 'டிஜே' வரை : சுருதிஹாசன் நடிக்க மறுத்த தெலுங்கு படங்கள்

சுருதிஹாசன் நடிக்க மறுத்த தெலுங்கு படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-05-11 05:43 GMT

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சுருதிஹாசன். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். இந்நிலையில், சுருதிஹாசன் நடிக்க மறுத்த தெலுங்கு படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டிஜே

கடந்த 2017-ம் ஆண்டு ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் டிஜே. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சுருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அவர் நடிக்க மறுத்திருக்கிறார். இதனால் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இப்படம் ரூ.50 கோடி செலவில் உருவாகி ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்தது.

அமர் அக்பர் அந்தோணி

ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் அமர் அக்பர் அந்தோணி. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சுருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அவர் நடிக்க மறுத்ததால் கதாநாயகியாக இலியானா நடித்தார்.

ஜெர்சி

கவுதம் தின்னானூரி இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான படம் ஜெர்சி. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சுருதிஹாசனிடம்பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், விளையாட்டு சார்ந்த படத்தில் நடிக்க விரும்பாததால் இப்படத்தில் அவர் நடிக்க மறுத்திருக்கிறார். பின்னர் சிரத்தா ஸ்ரீநாத் நடித்தார்.

பிஸ்னஸ் மேன்

மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் பிஸ்னஸ் மேன். பூரி ஜெகன்நாத் இப்படத்தை இயக்கினார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சுருதிஹாசனிடம்  பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அவர் நடிக்க மறுத்திருக்கிறார். பின்னர் இப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்தார்.

இந்த படங்கள் சுருதிஹாசன் நடிக்க மறுத்த தெலுங்கு படங்களாகும். இவை அனைத்தும் சிறிய பட்ஜெட்டில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்