ஜப்பான் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
'ஜப்பான்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.;

Image Credits: Twitter.com/@DreamWarriorpic
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
'ஜப்பான்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தின் டிரைலர் கடந்த 28-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜப்பான் படத்திற்கு மத்திய தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.