செல்பிக்காக ஜான்வி கபூரை சூழ்ந்த ரசிகர்கள்

தனது சகோதரரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பாரிஸில் இருந்து மும்பை திரும்பினார் ஜான்வி கபூர்.

Update: 2024-06-26 07:00 GMT

மும்பை,

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

இந்த நிலையில், நடிகர் ஜான்வி கபூர் தனது சகோதரர் அர்ஜுன் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு பாரிஸில் இருந்து மும்பை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஜான்வி கபூரிடம் ரசிகர்கள் செல்பி எடுப்பதற்காக அவரை சூழ்ந்தனர். அப்போது ஜான்வி கபூர் அசவுகரிகமாக காணப்பட்டார்.

பின்னர் காருக்கு அருகே சென்ற ஜான்வி கபூரிடம் ரசிகர்களில் ஒருவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது "இது என்னுடைய பிறந்தநாள் இல்லை" என்று ஜான்வி அவருக்கு பதிலளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்