'ஜெயிலர் 2' படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவு - ரஜினியுடன் மீண்டும் இணையும் நெல்சன்

ஒரு மாதத்தில் 'ஜெயிலர் 2' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நெல்சன் கூறினார்.;

Update:2024-09-02 14:46 IST

சென்னை,

நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர். அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களும் வரவேற்பை பெற்றன.

இந்த வெற்றியைத்தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குனர் நெல்சன். இதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், 'ஜெயிலர் 2' படம் குறித்த அப்டேட்டை நெல்சன் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, 'ஜெயிலர் 2' படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவு பெற்றதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரக்கூடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த தகவலைத்தொடர்ந்து, ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 'ஜெயிலர் 2' படத்தின் மூலம் ரஜினியுடன் மீண்டும் நெல்சன் இணைய உள்ளார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த், த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி வெளியாகிறது. மேலும், லோகேஷ் இயக்கத்தில் 'கூலி' படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்