நடிகையுடன் விஷால் காதல்?

நடிகையுடன் விஷாலுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது.

Update: 2022-10-28 02:37 GMT

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராக மீண்டும் பொறுப்பு ஏற்றுள்ள விஷாலின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்து வருகின்றன. நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டி முடித்ததும் சங்க வளாகத்திலேயே எனது திருமணம் நடக்கும் என்று அறிவித்து இருந்தார். ஆனால் கட்டிட பணிகள் தாமதம் காரணமாக அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே சில நடிகைகளுடன் விஷாலை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அதனை மறுத்தார். தற்போது இன்னொரு நடிகையுடன் விஷாலுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து விஷால் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது உறுதிப்படுத்தவில்லை. விஷால் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் 2-ம் பாகத்திலும் நடித்து இயக்க இருக்கிறார். ஆந்திர அரசியலில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் வெளியான தகவலையும் விஷால் மறுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்