மீண்டும் திரைக்கு வர உள்ளதா நடிகர் அஜித்குமாரின் 'பில்லா' ?

கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.;

Update:2024-01-28 23:06 IST
மீண்டும் திரைக்கு வர உள்ளதா நடிகர் அஜித்குமாரின் பில்லா ?

சென்னை, 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் 'பில்லா'வும் ஒன்று. கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். இது ரஜினியின் பில்லா பட ரீமேக்காக இருந்தாலும், அஜித்தின் நடிப்பும், படத்தை ஸ்டைலிஷாக எடுத்திருந்த விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து பில்லா 2-ம் பாகமும் எடுக்கப்பட்டது. ஆனால் இது முதல் பாகம் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், பில்லா திரைப்படத்தைத் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்