படமாகும் ஆணவக் கொலைகள்

ஆணவக்கொலையை மையமாக வைத்து `வர்ணாஸ்ரமம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.;

Update: 2023-01-13 04:45 GMT

`வர்ணாஸ்ரமம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்து சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாரித்துள்ளார். ராமகிருஷ்ணன், `பிக்பாஸ்'அமீர், வைஷ்ணவி ராஜ், ஶ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஷ்வரி, ஏ.பி.ரத்னவேல், விசை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சுகுமார் அழகர்சாமி டைரக்டு செய்துள்ளார். அமெரிக்க பாடகியான சிந்தியா லெளர்டே தமிழ் படங்களில் பாடுவதற்காக சென்னை வந்தபோது கதை கேட்டு பிடித்துப் போனதால் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். படத்தில் தனக்கு பிடித்தமான பாடலையும் பாடி உள்ளார்.

ஆணவக்கொலையை மையமாக வைத்து நெஞ்சை பதறவைக்கும் வகையில் படம் தயாராகி இருப்பதாக இயக்குனர் தெரிவித்தார். இசை: தீபன் சக்கரவர்த்தி, ஒளிப்பதிவு: பிரவீணா. எஸ்.

Tags:    

மேலும் செய்திகள்