இனிமேல்: லோகேஷ் கனகராஜை தேர்வு செய்தது எப்படி? - சுருதிஹாசன் கூறிய சுவாரஸ்ய தகவல்

எங்கள் இருவரின் காம்போ அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்ததாக நடிகை சுருதிஹாசன் கூறியுள்ளார்.;

Update:2024-03-26 17:32 IST
இனிமேல்: லோகேஷ் கனகராஜை தேர்வு செய்தது எப்படி? - சுருதிஹாசன் கூறிய சுவாரஸ்ய தகவல்

சென்னை,

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "இனிமேல்" ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்தார். தன்னுடைய இசை பற்றியும் இந்த பாடல் குறித்தும் பேசிய ஸ்ருதிஹாசன்.."எல்லோருக்கும் வணக்கம். முதலில் நான் "இனிமேல்" என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில்தான் எழுத துவங்கினேன்.

எழுத துவங்கும் போதே உறவுமுறை தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. உறவுமுறை என்பது எப்படி ஒரு ஆழமாக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் அப், டவுன்ஸ் இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த 'இனிமேல்" என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கிற எண்ணம் மேலெழுந்தது. பின்னர் என் அப்பா இதற்குள் வந்தார். அவரே 'இனிமேல்' பாடலின் முழு தமிழ் வரிகளையும் எழுதினார். இவ்வாறு தான் "இனிமேல்' உருவாகி இன்று இந்த மேடையில் இருக்கிறது.

"இனிமேல்" ஆல்பத்திற்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைக்க காரணம் என் தந்தை மற்றும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம். இது தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்திருக்கும் சலுகை.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களை எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று கேட்டால், விக்ரம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் என்று நினைக்கிறேன். ஒரு முறை இவரை கேமராவில் பார்க்கும் போது இவரது தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதிலிருந்துதான் இந்த எண்ணம் உதயமானது.

"இனிமேல்" பாடல் ஆல்பத்தின் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இது நான்கு நிமிடத்திற்குள் ஒரு உறவுமுறையில் இருக்கும் ஆழத்தை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சிதான். உறவுமுறைகளில் இருக்கும் நிறை குறைகளை கூறுவதன் மூலம், இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவர்களின் உறவுமுறைகளில் இதன் மூலம் சீர் தூக்கிப் பார்ப்பார்கள் என்கின்ற ஒரு சிறு நம்பிக்கை தான்.

எங்கள் இருவரின் காம்போ அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் எப்போதும் மிக நேர்மையாக கருத்து சொல்லுவார். அவருக்கு எங்கள் ஜோடிபொருத்தம் பிடித்திருந்தது என்றே கூறினார். இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் இயக்குநர் இதில் நடித்திருப்பது என் அதிர்ஷ்டம்தான். நான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்