'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ?

இறுதி கட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது.;

Update:2024-05-09 22:21 IST

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பிறகு 'இந்தியன்' இரண்டாம் பாகத்தை தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது.  'இந்தியன் 2 ' படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

'இந்தியன் 2' படத்தை ஜூன், அல்லது ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டனர்.இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 'இந்தியன் 2' வெளியாக உள்ளது என புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது. எனவே ஆகஸ்ட் மாதத்திற்கு 'ரிலீஸ்' தேதி தள்ளி வைக்கப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்