எனது மூத்த சகோதரரின் மகன் அரசியலுக்கு வருவதை முழு மனதுடன் வரவேற்கிறேன் - நடிகர் கார்த்திக் பேட்டி

எம்.ஜி.ஆருக்குபின் அரசியலுக்குவந்த நடிகர்கள் பெரிய வெற்றி பெறவில்லை என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.;

Update:2024-04-11 11:00 IST

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

எனது மூத்த சகோதரர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தந்தை வழியில் அரசியலுக்கு வருகிறார். வரவேற்போம். நண்பரான சரத்குமார் மனைவி ராதிகாவும் போட்டியிடுகிறார். மக்கள் முடிவு செய்யட்டும். நடிகர் விஜய் சரியான வயதில் அரசியலுக்கு வருகிறார். ஆனால் அவர் நடிக்கவும் வேண்டும். நிறைய அனுபவம் கொண்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

எம்.ஜி.ஆருக்குபின் அரசியலுக்குவந்த நடிகர்கள் பெரிய வெற்றி பெறவில்லை. சினிமாவில் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கின்றனர். அது எனக்கு வருத்தம். மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்