'எனக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்' - பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசிய வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசியிருக்கிறார்;

Update: 2024-09-03 05:58 GMT

சென்னை,

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபின், மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்தநிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'சினிமாவைப்போல ஊடகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இதை கடந்து செல்கின்றனர். பெண்கள் பாதுகாப்பாக இருக்க நமக்கு இடம் தேவை. எனக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இனியாவது தமிழ் சினிமாத்துறை ஏதாவது செய்ய வேண்டும். தண்டனையை உறுப்படுத்தினால்தான் அதை செய்பவர்கள் பயப்படுவார்கள்', என்றார்.

தற்போது, வெங்கட் பிரபு 'தி கோட்' படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இபபடம் வருகிற 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்