எனது மனதில் வேறு மாதிரியான உணர்வுகள்: கிருத்தி சனோன்
பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் தனது உணர்ச்சிகளை மறைக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.;
தெலுங்கில் அறிமுகமான நடிகை கிருத்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். பின்னர் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது. கிருத்தி சனோன் நடிப்புக்காக மிமி படத்துக்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது தபு, கரீனா கபூர் உடன் இணைந்து க்ரூ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் டிரைலர் 50 மில்லியனுக்கும் (5 கோடி) மேல் பார்வைகளைப் பெற்று கவனம் ஈர்த்தது. இப்படம் வரும் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கிருத்தி சனோன் கூறியதாவது: " நடிகர்கள், நடிகைகளும் மனிதர்கள்தான். அவர்களைக் குறித்து எழுதுவது அல்லது பேசுவது நிச்சயமாக பாதிப்பினை ஏற்படுத்தும். நாங்கள் கலைஞர்கள். அதனால் கேமிரா, செய்தியாளர்களுக்கு முன்பாக நாங்கள் வலுவானர்கள் என்பதைக் காட்ட எப்போதும் ஹா ஹா ஹீ ஹீ என இருக்கிறோம். ஆனால் எங்களுக்கும் மனதில் வேறு மாதிரியான உணர்சிகள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லம் வெளியே மறைக்க வேண்டியிருக்கிறது. இது எனக்கு பிடிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.