உண்மை தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை- ஷோபிதா துலிபாலா
நாக சைதன்யாவும், நடிகை ஷோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கூறப்பட்டது.;
சென்னை,
நடிகர் நாகசைதன்யா நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர தம்பதியாக திகழ்ந்த இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர். பின்னர் இருவரும் நடிப்பில் பிசியாகி விட்டனர். சமந்தா மயோசிடிஸ் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டு தற்போது மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்தநிலையில் நாக சைதன்யாவும், நடிகை ஷோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கூறப்பட்டது. மேலும் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
ஷோபிதாவிடம் இதுகுறித்து கேட்டபோது ,உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும்? எப்போதும் அரைகுறையாக அறிந்து எழுதுபவர்களுக்கு பதில் சொல்வதை விட வாழ்க்கையைப் பார்த்து சென்றுவிடலாம்'', என்று கூறினார்.