ஹிப்ஹாப் ஆதியின் 'கடைசி உலகப் போர்' கிளிம்ப்ஸ் வீடியோ

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update:2024-07-20 14:44 IST

சென்னை,

ஹிப் ஹாப் ஆதி, சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின் தனி ஒருவன், ஆம்பள, வணக்கம் சென்னை, கதகளி, கவண், இமைக்கா நொடிகள், அரண்மனை போன்ற பல படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த மே மாதம் வெளியான அரண்மனை 4 திரைப்படத்திற்கும் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். அதேசமயம் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து நட்பே துணை, வீரன் போன்ற படங்களிலும் நடித்தார். கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்திருந்த பிடி சார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 

தற்போது ஹிப் ஹாப் ஆதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஹிப் ஹாப் ஆதி கடைசி உலகப் போர் எனும் புதிய படத்தில் நடிக்கிறார். படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தானே தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். 'கடைசி உலகப் போர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. போஸ்டரில், முகத்தில் ரத்தம் வழிந்தும், தலைக்குள் போர், வன்முறை, குண்டு வெடிப்பு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. போரால் பாதிக்கப்பட்டு சீர்குலைந்த கட்டிடங்கள், குண்டுகள் வெடித்து சிதைந்த கட்டிடங்கள் சிதறிக்கிடக்கும் காட்சிகள், பிணங்கள், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர், மக்களை அடைத்து துன்புறுத்தும் காட்சிகள், வாழ வழியற்று தவிக்கும் மக்கள் என படத்தின் காட்சிகள் கிளிம்ஸ் வீடியோவிலுள்ளது.வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு உலகத்தரத்தில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்