'கூகுள் பே செய்யுங்கள்' - பிச்சைக்காரரின் செயலால் அதிர்ச்சியான நடிகை

டிஜிட்டல் இந்தியா என்றால் இதுதானோ என்று நினைக்க தோன்றியது என்று ஹினா கான் கூறினார்.;

Update:2024-03-27 07:28 IST

image courtecy:instagram@realhinakhan

மும்பை,

பிரபல இந்தி நடிகை ஹினா கான். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றார். இந்தி பிக்பாஸ் 11-வது சீசனிலும் பங்கேற்றார்.

இந்த நிலையில் பிச்சைக்காரர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, "நான் காரில் சென்றபொது ஒரு ஜங்ஷனில் ரெட் சிக்னல் விழுந்தது. கிரீன் சிக்னலை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஒருவர் என் கார் கதவின் கண்ணாடியை தட்டினார். பணம் கொடுக்கும்படி கேட்டார்.

என்னிடம் பணம் இல்லை என்று பதில் அளித்தேன். அவர் உடனே இன்று காலையில் இருந்து யாருமே பிச்சை போடவில்லை ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. வீட்டில் தம்பி தங்கை இருக்கிறார்கள். தயவுசெய்து பிச்சை போடுங்கள் என்று கெஞ்சியபடி இருந்தார்.

உண்மையாகவே என்னிடம் பணம் இல்லை என்றேன். அவர் உடனே கூகுள் பே செய்யுங்கள் என்று தனது நம்பர் கொடுத்தார். நான் அதிர்ச்சி அடைந்தேன். ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு தேவையான அளவுக்கு பணம் அனுப்புங்கள் என்று வற்புறுத்தினார்.

உடனே அவருக்கு தேவையான பணத்தை யுபிஐ மூலம் அனுப்பி வைத்தேன். இந்த சம்பவம் நிஜமாக எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. டிஜிட்டல் இந்தியா என்றால் இதுதானோ என்று நினைக்க தோன்றியது'' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்