இவ்வளவு பணம் சேர்ந்து விட்டதா..!! என்ன செய்யலாம்...? பிரபல நடிகரின் கலகல பேட்டி
பாலிவுட்டில் பிரபல நடிகரான கோவிந்தா ஸ்டாராகி, நிறைய பணம் சம்பாதித்ததும் அதனை வைத்து கொண்டு என்ன செய்வது என தெரியாமல் இருந்தேன் என பேட்டியில் கூறியுள்ளார்.
புனே,
பாலிவுட்டில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. இவரது வளைந்து ஆடும், நடன அசைவுகளுக்காகவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பல ஹிட் படங்களை கொடுத்து தன்னை முன்னிறுத்தி கொண்டார்.
இந்நிலையில், சக நடிகரான வினய் பதக் என்பவருடன் நடிகர் கோவிந்தா மற்றும் அவரது சகோதரர் கீர்த்தி இருவரும் விவாதித்து கொண்டனர். அப்போது, கோவிந்தா மற்றும் சகோதரர் கீர்த்தி இருவரும் சேர்ந்து பேட்டி அளித்தனர். அப்போது, தங்களது குடும்பம் பெரிய வறுமையில் சிக்கி தவித்தது. அதில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே தனது விருப்பம் என கீர்த்தி கூறியுள்ளார்.
திரை துறையில் கோவிந்தா தனது பாதையை அவராகவே வகுத்து கொண்டார். அவர் திரை வாழ்க்கையை தொடங்கியபோது, அவருடைய செயலாளர் பொறுப்பை ஏற்று கொண்டேன். அப்போது, பல படங்களில் அவரை ஒப்பந்தம் போட வைத்தேன்.
ஒரு நாள் நாங்கள் இருந்த அறையை கோவிந்தா மூடினார். நிறைய பணம், அவரது வங்கி கணக்குகள் எல்லாவற்றையும் எடுத்து வந்து கொட்டினார். நான் மகிழ்ந்து போனேன். ஆனால், அவற்றை எல்லாம் வைத்து கொண்டு என்ன செய்வது என நாங்கள் யோசிதோம்.
அப்போது கோவிந்தா உடனடியாக என்னிடம் வந்து, பப்பு இவ்வளவு பணம் இருக்கு. என்ன செய்யலாம். 100 ஆட்டோ ரிக்சா வாங்குவோம் என கூறினார். ஆனால், அது நமது தொழில் இல்லை என நான் கூறினேன். அதன்பின் அவர் பெரிய நட்சத்திர நடிகரானார். அப்போதும், இவ்வளவு தொகையை வைத்து நாம் என்ன செய்யலாம் என நாங்கள் வியந்து போனோம்.
இந்த முறை அவர், பப்பு, நாம் 100 லாரி வாங்குவோம். என்ன..? என கூறினார். நான் மீண்டும் அது நமது தொழில் இல்லை என கூறினேன் என கூறியதும், அருகே இருந்த கோவிந்தா பலத்த சிரிப்புடன், அதனை நினைவு கூர்ந்தபடி, நான் ஏதேனும் கூறினால், எப்போதும் அதற்கு இதுபோன்ற பதில்களை கூறுவது அவனது வழக்கம் என கூறியுள்ளார்.
கோவிந்தா, தொடக்கத்தில் படங்களில் நடித்து, அறிமுகம் ஆன பின்னால், பல படங்களில் ஒப்பந்தம் போட்டேன் என கூறியுள்ளார். அவர் கூறும்போது, நடிக்க தொடங்கிய பின் ஒரு கட்டத்தில் 70 படங்களில் நடிக்க சம்மதித்து கையெழுத்திட்டேன்.
ஆனால் பல படங்களை கைவிட வேண்டியிருந்தது. ஏனெனில், அந்த அளவுக்கு தன்னிடம் நேரம் இல்லை என கூறுகிறார். அதன்பின்பு, முதல் சில ஆண்டுகளில், வருடத்திற்கு 10 படங்கள் என்ற அளவில் மட்டுமே என்னால் நடிக்க முடிந்தது என கூறியுள்ளார்.
இதற்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 15 ஆண்டுகளாக திரை துறையில் முதலீடு செய்து ரூ.16 கோடி வரை இழந்துள்ளேன். எனது திரை வாழ்க்கையை அழிக்க சிலர் விரும்பினர். எனது படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. எனக்கு எதிராக சதி நடந்தது. நண்பர்கள் புறமுதுகு காட்டினர் என்று கூறியுள்ளார். ஆனால், நான் அதில் வீழ்ந்து போகவில்லை. மீண்டும் எழுந்து வருவேன் என தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.