நெருங்கிய தோழியின் கணவரை திருடினேனா...! ஹன்சிகா மோத்வானி பதில்

ஹன்சிகா மோத்வானி தனது நெருங்கிய் தோழியின் கணவரை திருடிவிட்டதாக டிரோல் செய்யப்பட்டார்.;

Update:2023-02-10 16:11 IST

மும்பை

நடிகை ஹன்சிகா தனது பிசினஸ் பார்ட்னரும், காதலருமான சொஹைல் கதூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்தது.

ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சி இன்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது.  திருமண அறிவிப்பு வெளியானதுமே ஹன்சிகா மோத்வானி தனது நெருங்கிய தோழியின் கணவரை திருடிவிட்டதாக டிரோல் செய்யப்பட்டார்.

ஹன்சிகா சொஹைலுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்த உடனேயே, முதல் மனைவி\ ரிங்கியுடனான சொஹைலின் முதல் திருமணம் குறித்து சமூக ஊடகங்களில் பலர்  விமர்சனம் செய்தனர். தனது நெருங்கிய தோழியான ரிங்கியின் திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து ஹன்சிகா தனது தோழியின் கணவரை "திருடினார்" என்று கடுமையாக கேலி செய்யப்பட்டார்.

தற்போது வெளீயாகி உள்ள இந்த திருமண வீடியோவில் ஹன்சிகா தன்னைபற்றி வரும் வதந்திகளை மறுத்து உள்ளார்.

அதில் ஹன்சிகா கூறும் போது

எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு பொது நபராக, மக்கள் விரல்களை சுட்டிக்காட்டுவது மற்றும் மக்களை மோசமாக உணர வைப்பது மிகவும் எளிதானது.அதற்கான நான் விலையை இப்போது நான் கொடுக்கிறேன் என கூறினார்.

சொஹைல் எனக்கு முன்பே திருமணம் ஆன செய்தி.மற்றும் பிரிந்ததற்கு ஹன்ஷிகா தான் காரணம் என்று கூறப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது "நான் 2014 இல் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டேன், ஆனால் திருமண காலம் மிகவும் குறைவாக இருந்தது. இருப்பினும், அவர்கள் நண்பர்கள் மட்டுமே என கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்