அக்சய் குமாரின் 'ஸ்கை போர்ஸ்' படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்
அக்சய் குமார் ஹீரோவாக நடிக்கும் ‘ஸ்கைபோர்ஸ்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.;
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்தியாவின் வானூர்தி சேவையை தொடங்க நினைத்து அதில் வெற்றியும் பெற்ற கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக ஹிட் அடித்தது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
தற்போது, இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இந்தியில் 'சர்பிரா' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இதில் அக்சய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ராதா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படம் கடந்த 12-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கும் 'ஸ்கைபோர்ஸ்' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருதுபெற்ற கீரவாணி முதலில் இசை அமைப்பதாக இருந்தது. தயாரிப்பாளர் தினேஷ் விஜனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தில் இருந்து கீரவாணி விலகினார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் அந்தப் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். 'ஸ்கை போர்ஸ்' படத்தில் அக்ஷய்குமாருடன் சுனில் ஷெட்டி, நிம்ரத் கவுர், சாரா அலிகான் உட்பட பலர் நடித்துள்ளனர்.