பழனி முருகன் கோவிலில் கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் தம்பதி சாமி தரிசனம்
கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் தம்பதி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.;
திண்டுக்கல்,
நடிகர் கார்த்திக்கின் மகனும், நடிகருமான கவுதம் கார்த்திக், அண்மையில் நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் காதலர் தினமான இன்று, கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் தம்பதி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக மலை மீது இருக்கும் கோவிலுக்குச் சென்றனர். பழனி முருகன் கோவிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பல்வேறு நடிகர், நடிகைகள் கோவிலுக்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.