மருத்துவ சிகிச்சைக்காக... 1 வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா

Update:2023-07-06 01:46 IST

நடிகை சமந்தா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகி ஓய்வு எடுக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்காக ஏற்கனவே சில படங்களில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை.

தற்போது சிட்டாடல் வெப் தொடர் மற்றும் தெலுங்கில் குஷி படம் ஆகியவை கைவசம் உள்ளன. இவற்றில் நடித்து முடித்து விட்டு ஓய்வு எடுக்க போகிறாராம். தனது உடல்நிலை காரணமாகவே இந்த ஓய்வு என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்தார். கொஞ்சம் உடல்நிலை தேறிய நிலையில்தான் சில படங்களில் மீண்டும் நடித்தார். ஆனாலும் முழு அளவில் குணமாகவில்லை.

எனவே ஒரு வருடம் சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகி இருந்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து பூரண குணமான பிறகு மீண்டும் நடிக்க வருவார் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்