தென்னிந்தியாவில் முதல் முறை... சாதனை படைத்த 'ரவுடி பேபி' பாடல்!
யூ-டியூபில் ‘ரவுடி பேபி’ பாடல் 150 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.;
சென்னை,
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த 'மாரி-2' திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' என்ற பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலை தனுஷ் எழுதியிருந்தார். தனுஷ் மற்றும் பாடகி தீ ஆகியோர் பாடியிருந்தனர். அதோடு இந்த பாடலின் நடன இயக்குனர் பிரபு தேவா, தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் கூட்டணியில் பாடல் வீடியோவும், நடனமும் யூ-டியூபில் வைரலானது.
தமிழில் வெளியான இந்த பாடல் வீடியோ, உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது யூ-டியூபில் 'ரவுடி பேபி' பாடல் 150 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. யூ-டியூபில் இத்தனை கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை 'ரவுடி பேபி' பாடல் வீடியோ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.