பிரபாஸ் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்

சலார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியானது.

Update: 2023-12-22 07:06 GMT

பெங்களூரு,

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'சலார்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் இரண்டாவது பாடலை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்நிலையில், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் கூடிய பிரபாஸின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்