பிரபல டைரக்டர் மரணம்
உலகின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரான பிரெஞ்சு டைரக்டர் ஜான் லுக் கோதார்த் மரணம் அடைந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 91. ஜான் லுக் கோதார்த் இயக்கிய பிரீத்லெஸ், கண்டெம்ப்ட், எ மேரிட் வுமன் உள்ளிட்ட பல படங்கள் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றன. பிரெஞ்சு திரையுலகின் காட் பாதர் என்று அழைக்கப்பட்டார். பல படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். தயாரிக்கவும் செய்தார். திரைப்படங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மரபுகளை உடைத்து புதிய பாணியை உருவாக்கினார். ஒரு திரைப்படம் ஆரம்பம், நடுப்பகுதி முடிவு என்ற வரைமுறையில்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை'' என்றார். இவரிடம் பணியாற்றிய பலர் முன்னணி டைரக்டர்களாக உயர்ந்துள்ளனர். ஜான் லுக் கோதார்த் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.