கமல்ஹாசனின் 'தக் லைப்' படத்தில் இணைந்த பிரபல நடிகை ...!

நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.;

Update:2024-01-11 20:27 IST
கமல்ஹாசனின் தக் லைப் படத்தில் இணைந்த பிரபல நடிகை ...!

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். நடிகர்கள் கௌதம் கார்த்திக் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் இணைந்துள்ளதாக பட நிறுவனம் நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ஐஸ்வர்ய லட்சுமி இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்