ரூ.4 லட்சம் வாடகை வீட்டில் பிரபல நடிகை

Update:2023-09-23 09:59 IST

பிரபல இந்தி நடிகை அலியாபட். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூர், பிரபல டைரக்டர் மகேஷ் பட் மகள் அலியாபட்.

இருவரும் சினிமா வாரிசுகள் என்பதால் இவர்களுக்கு பட வாய்ப்புகள் எளிதாக கிடைக்கின்றன என்று நடிகை கங்கனா ரணாவத் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ரன்பீர் கபூரும், அலியாபட்டும் புனேயில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஆடம்பரமான சொகுசு வீட்டில் வாடகைக்கு குடியேறி இருக்கிறார்கள். இந்த வீட்டின் மாத வாடகை ரூ.4 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது வருடம் ரூ.4.2 லட்சம் என்றும், மூன்றாவது வருடத்தில் ரூ.4.4 லட்சம் என்றும் வாடகையை உயர்த்தி கொடுக்கவும் ஒப்பந்தம் போட்டு உள்ளனர். ரன்பீர் கபூரும், அலியாபட்டும் மும்பையில் புதிய வீடு ஒன்றையும் கட்டி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்