பகத் பாசிலின் அடுத்த படம் - புகைப்படம் பகிர்ந்த படக்குழு

பகத் பாசிலின் அடுத்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்க இருக்கிறார்.

Update: 2024-05-17 04:07 GMT

சென்னை,

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பகத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது. பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (பகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

இந்தப் படம் முதல் 5 நாள்களில் ரூ. 50 கோடியைக் கடந்து சாதனை படைத்த நிலையில், சமீபத்தில் உலகளவில் ரூ.100 கோடியை தாண்டியது. தற்போது ரூ.150 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பகத் பாசில் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்